நண்பர்களே இந்த பதிலில் நூறாண்டு வாழ வைக்கும் அறு சுவை உணவுகள் என்ற நூலை இந்த பதிவில் இணைத்திருக்கிண்றேன்.
உணவிலிருந்தே மக்கள் தோன்றினர். பூமியிலுள்ள அனைத்து
உயிரினங்களும் உணவிலிருந்தே உண்டாயின. அளைத்தும்
உணவினாலேயே வாழுகின்றன. கடைசியில் உணவிலேயே கலக்கின்றன.
உணவே கயிர்களின் ஆரம்பம். எனவேதான் உணவு அனைத்திற்கும்
மருந்து என்று சொல்லப்படுகிறது. யார் உணவை தெய்வீகமாகப்
போற்றுகிறார்களோ அவர்கள் தவறாமல் உணவைப் பெறுகின்றனர்...
தைத்திரீய உபநிடதம் 2.1-2.2
உணவின் அருமையையும், முக்கியத்துவத்தையும் இதைவிட அழகாக,
சுருக்கமாக எவராலும் கூற இயலாது: தைத்திரீய உபநிடதத்தின்
இரண்டாம் அத்தியாயத்தின் முதல் இரண்டு, சுலோகங்களில்
கூறப்பட்டுள்ள இந்தக் கருத்துகள் மிகமிக நுட்பமானவை.
உயிர் வாழ அடிப்படைத் தேவைகள் இரண்டுதான். உணவு, காற்று.
இது மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும்
பொருந்தும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களிலிருந்து, பரிணாம
வளர்ச்சியின் உச்ச நிலையில் உள்ள மனிதர்கள் வரை உயிர் வாழ உணவும்
காற்றும் அவசியமாகிறது.
உடலை இயக்கும் உயிர் சக்தி உணவிலிருந்தே உருவாக்கப்படுகிறது.
எனவேதான் நம் முன்னோர்கள் உணவிற்கு மிகுந்த முக்கியத்துவம்
அளித்தனர்.
உண்ணும் உணவு சரியானதாக இருந்தால் உடலின் வளர்ச்சியும்,
இயக்கங்களும் சரியாக இருக்கும். உயிர் சக்தியும் தேவையான அளவில்
உற்பத்தி - செய்யப்படும். உயிர்சக்தியின் இயக்கங்களும் தடைகளின்றி
நடைபெறும். ,
உண்ணும் உணவில் குறைபாடுகள் இருந்தால் அல்லது உண்ணும் முறை
தவறாக இருந்தால் அது உடலிலும் உயிர்சக்தியிலும் பாதிப்புகளை
உருவாக்கும். நோய் நொடிகள் உருவாகவும் இது ஒரு முக்கிய காரணமாக
அமைந்துவிடும்