இது ஒரு முடிவில்லா
யுத்தத்தின் கதை! ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னால் நின்று வென்று ஆண்ட
பாண்டிய நாட்டின் தெருக்களுக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறது இந்தப்
படங்களும் பக்கங்களும். மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இரண்டு மகன்களான
சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும்தான் அன்றைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
காரணமாய் அமைந்தவர்கள். குடும்பத்துக்குள் குரோதம் பாய்ந்து குத்து
வெட்டுகளுக்காக நாட்டையே பறிகொடுப்பது மன்னர் காலத்து வழக்கம். இன்றும் அதே
பழக்கம் தொடரவே செய்கிறது. அதனால்தான் இது முடிவில்லா யுத்தத்தின் கதை