பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்றும், ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து நாம் நினைத்ததை சாதிக்க உதவும் ஒரு முத்திரையை குபேர முத்திரை. எவர் ஒருவர் குபேர முத்திரையில் தியானம் இருக்கிறாரோ அவரின் வாழ்வு செழிப்பாக இருக்கும். துன்பங்கள் பறந்தோடும், கோடீஸ்வர யோகம் உண்டாகும். பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கும். அதனாலேயே இந்த முத்திரை குபேர முத்திரை என்ற பெயர் பெற்றது.
மேலே உள்ள படத்தில் நாம் குபேர முத்திரையை பார்க்கலாம். நமது விரலை கொண்டு இந்த முத்திரையில் எப்படி இருப்பது என்று பார்ப்போம் வாருங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் சப்பணமிட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொண்டு கண்களை மென்மையாக மூடு வேண்டும். பிறகு கட்டை விரைந்த நுனிப்பதுதியில் ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலில் நுனியை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை மடக்கி உள்ளகையில் அழுத்த வேண்டும். இந்த நிலையில் நமது உள்ளங்கையானது கீழ்நோக்கி இல்லாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதையே நாம் குபேர முத்திரை என்கிறோம். ஆரம்ப நாட்களில் இந்த முத்திரையை செய்ய சிறிது சிரமமாக இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களில் இது சுலபமாகி விடும்.
இந்த முத்திரையை நாம் செய்ய துவங்கும் முன்பு நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானித்து அதை இறைவனிடம் வேண்டிய வாறு மனதை ஒருமுகப்படுத்தி இந்த முத்திரையில் இருக்க வேண்டும். நம்மால் தொடர்ந்து எவ்வளவு நேரம் இந்த முத்திரையில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம். நீண்ட நேரம் இருந்தால் நல்ல பலன் உண்டு.
இந்த முத்திரையில் இருக்கும் சமயத்தில் மனதை ஒருமுகப்படுத்துவது அவசியமாகிறது. ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். தொடர்ந்து ஓர் இரு வாரங்கள் முராய்ச்சித்தால் மனமானது தன்னால் கட்டுக்குள் வரும். செல்வத்தை வேண்டி இந்த முத்திரையில் இருந்தால், செல்வம் கிடைப்பதற்கான அனைத்து வழிகளும் பிறக்கும்.
இந்த முத்திரையில் ஒருவர் இருக்கும் சமயத்தில் அவர் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் முழுமையாக அழிக்கப்படும் ஆகையால் நேர்மறை திறன் பெருகி அது ஆற்றலாக அவருள் வெளிப்பட துவங்கும். இதனால் எதிரிகள் கூடு நமக்கு வயப்படுவர். இதை தொடர்ந்து முயற்சித்தால் நமது உடலில் உள்ள விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும். அதன் மூலம் நமது மூளைக்கு ஒரு வித ஆற்றல் கிடைக்கும். அதோடு நமது ஆழ் மனதில் ஒரு வித அமைதி நிலைகொள்ளும். இதனால் நமது உணர்வுகளை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
ஓம் சர்வம் சிவார்ப்பணம்
Thank you to
-SiththarKural-
-SiththarKural-