மருத்துவ குறிப்புக்கள் சில தரப்பட்டுள்ளன. படிப்பதற்கு இலகுவான முறையில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள்
வாசிப்பு என்பது ஒரு பிள்ளை கருவறையிலிருக்கும் போதே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதாவது கருவுற்ற தாய் நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் பிள்ளையுடைய மூளை விருத்தி சிறப்பாக நடைபெறும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். எப்படியாவது வாசிப்பு என்பது சிறுபராயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதனால் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார் பின்பற்றக்கூடிய சில வழிமுறைகளை ஆராய்வோம்.
வாசிப்பு பல முக்கியமான திறன்களை கொண்ட ஒரு செயன்முறையாகும். அதாவது சிந்தித்தல், ஆராய்தல்; காரணம்கண்டறிதல்; கற்பனை செய்தல் என்பவற்றுடன் நியாயம் கண்டறிதல் போன்றவற்றை உள்ளடக்கும்.
வாசிப்பின் நோக்கம்.
1. சந்தோசம்/மகிழ்ச்சி/பொழுதுபோக்கு/ஓய்வுக்காக வாசித்தல்.
2. தகவல் தேவைக்காக வாசித்தல்
3. அறிவுக்காக /அறிவைத் தேடி வாசித்தல்
மேற் கூறப்பட்ட இரணடோ மூன்றோ காரணங்களுக்காகவும் ஒருவர் வாசிக்கலாம். வாசிப்பு என்பது ஒரு மகிழ்ச்சிகரமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு செயற்பாடாகும். ஆங்கிலத்தில் இதை Read for fun என்றும் Read for Pleasure என்றும் பொதுவாகக் கூறுவார்கள். வாசிப்பு ஒரு முக்கியமான திறனாகும். அது பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒர் ஆயுதம் என்று கூறலாம்.
வாசிப்பு என்பது ஒரு எரிச்சலூட்டும் அல்லது அலுப்பூட்டும் விடயமல்ல என்றும் அதுவே எதிர்கால வெற்றிக்குரிய ஒரு திறவுகோல் எனறும் பிள்ளைகளை விளங்க வைப்பது ஆசிரியர்களுக்கடுத்து பெற்றோர்களின் கடமையாகும். சுவரஸ்யமான வாசிப்பில் ஒரு புறம் மகழ்ச்சியடைவதுடன் இன்னொரு புறம் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது. வாசிப்பது என்பது ஒரு குறித்த இனத்துக்கோ சமூகத்திற்கோ, வயதெல்லைக்கோ உட்பட்டதல்ல. அனைவரும் வாசிக்கலாம். பயன்பெறலாம். சிறு வயதிலிருந்து எமது குழந்தைகளை வாசிக்கத்தூண்டலாம். இதன் மூலம் அவர்களை சிறந்த நற்பிரஜைகளாக உருவாக்கலாம். ஆரம்பத்தில் வாசிப்பு என்பது புத்தகம் அல்லது பத்திரிகை மூலம் தான் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் எதிர் காலத்தில் பாவிக்கப்போகும் இலத்திரனியல் ஊடகங்களின் தகவல்கள், இணையச்செய்திகள், புலமைசார் இலத்திரனியல் ஆய்வறிக்கைகள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிப்பதற்கும், பாவிப்பதற்கும் பழகிக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாது ‘ஒரு சிறந்த வாசிப்பாளன் தான் சிறந்த எழுத்தாளன்’ நிறைய விடயங்களை வாசிப்பதன் மூலம் அவர்களின் படைக்கும் ஆற்றல் வளர்ச்சியடைகின்றது. எழுத்தாற்றல் குறைந்த பிள்ளைகளைப் பற்றிய ஓர் ஆய்வில் அவர்களுடைய வாசிப்புத்திறன் குறைவாக இருந்தமையே எழுத்து திறன் குறைந்தமைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தரவிறக்க
வாசிப்பின் முக்கியத்துவம்
தகவல் பெறுவதற்கு மிக முக்கியமான ஒரு வழி வாசிப்பு ஆகும். ஆகவே ஏனைய அனைத்துக் கல்வி சார் திறன்களுக்கும் அடிப்படையானது வாசிப்பு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை விடயம் தெரிந்த, அறிந்த அறிவு பெற்ற மனிதனாக உருவாக்கும். ஒரு மனிதன் தான் வேலை செய்யும் இடத்தில் திறன்பட செயற்படுத்துவதற்கும் வினைத்திறனுடன் வேலை செய்வதற்கும் வாசிப்பு அவசியம். தற்கால உலகத்தில் திறமையாகத் தொழிற்படுவதற்கு வாசிப்பு ஒரு அடிப்படை தேவையாகும். இவ்வடிப்படைத் திறனில்லாவிடின் விரக்தி, கோபம், பயமஇ; போன்ற உளரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. சிறந்த உள விருத்திற்கு வாசிப்பு அவசியமாகும்.
ஒரு நல்ல தொழிலைப் பெறுவதற்கும் அதிக வாசிப்புப் பழக்கம் உறுதுணையாக இருக்கும். குறைந்த வாசிப்புத்திறனுள்ளவர்களால் ஒரு விடயத்தை கிரகிப்பதற்கும் ஒர் அறிக்கைச் செய்தியை வாசித்து விளங்குவதற்கும்இ பதிலளிப்பதற்கும் அதிக நேரத்தை செலவிட வேண்டி ஏற்படும். போதிய வாசிப்பும் கிரகித்தலும் இன்றேல் ஒரு தனி நபரின் அடைவு மட்டம் குறைவாகவே இருக்கும். புதிய விடயங்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிந்துகொள்ள வாசிப்பு இன்றியமையாதது.
விஷேடமாக வாசிப்பதன்; மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மொழித்திறன் விருத்தி, சொல்வன்மை, சொல்லாட்சி, voucabulary power என்பன விருத்தியடைகின்றது. வாசிப்பின் மூலம் சிறு பிள்ளைகளுடைய மொழித்திறன் விருத்தியும் கேட்டல் திறனும் அதிகரிக்கின்றது அவதானித்துக்கேட்டல் குறைவாகவுள்ளவர்கள் தொழிலும் வாழ்க்கையிலும் பலவற்றை இழக்கவேண்டி ஏற்படும். ஏனையவர்கள் தொடர்பு கொள்ள அல்லது எடுத்துக்காட்ட முனையும் விடயம் என்ன என்பதை சிறந்த வாசிப்புத்திறனுள்ளவர்கள் இலகுவாக விளங்கிக்கொள்வார்கள்.
பொது அறிவு வளர்ச்சியும் ஏனையவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றை அறியும் வாய்ப்பும் கிடைக்கின்றது. தன்னம்பிக்கை, ஆளுமை விருத்தி, ஞாபக சக்தி அதிகரிப்பு, கிரகித்தல் திறன் Comprehension Power என்பவை அதிகரிக்கின்றன. பிள்ளைகள் எழுத்துப்பிழையின்றி எழுதுவதற்கு வாசிப்பு உதவுகின்றது. Avoid spelling mistakes. தர்க்க சிந்தனையும் (Critical thinking power) விருத்தியடைகின்றது. அத்துடன் பிள்ளையுடைய கற்பனைத்திறனும் அதிகரிக்கின்றது.
வாசிப்பின் மூலம் ஒரு மனிதன் எல்லா மூலை முடுக்குகளுக்கும் போய் வரலாம். அவன் ஒரு அரசனாக ஒரு வீரனாக ஒரு நடிகனாக ………என்று எல்லா வகையான பாத்திரங்களுக்குள்ளேயும் சென்று மகிழ்ச்சியடையலாம். வாசிப்பின்; மூலம் சிறந்த ஆக்கத்திறன் கொண்ட பிள்ளையை உருவாக்க முடியும் (Creativity). . தன்னைப்பற்றிய ஒரு நல்ல மதிப்பை அல்லது கௌரவத்தை (image) உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைவது வாசிப்புத்தான், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகம்.குறைவாக வாசிப்பவர்கள் அவர்களுடைய அபிப்பிரயங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை இழந்தவர்களாக அல்லது குறைந்தவர்களாகவே இருப்பர். வாசிப்பு மூலம் ஒரு மனிதன் தொழிலிலும் வாழ்க்கையிலும் உச்சப் பயன் அடைந்து கொள்ள முடியும்.
சிறுவர்களை வாசிக்க தூண்டுவதற்கான சில தந்திரோபயங்கள்
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக வீட்டில் கடைப்பிடிக்கவேண்டிய சில நடவடிக்கைகள் கீழே குறிப்பிடபபட்டுள்ளன.
• பாடசாலையில் வாசிக்க வேண்டிய விடயங்களையும் வாசிக்கத்தூண்டுவதுடன் பெற்றோhர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களாக புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம் நிச்சயமாக அவற்றை பிள்ளைகள் விரும்பி வாசிப்பர். படுக்கைக்கு செல்வதற்கு முன் ஏதாவது வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளல் சிறந்தது. பல்வேறுபட்ட ஃவிதவிதமான வாசிப்பு சாதனங்களை பாவிப்பதற்கு ஊக்கப்படுத்தல். வீட்டில் அதிகளவு வாசிப்பு சாதனங்களை (புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை)சேர்த்து வைத்தல் வீட்டில் அதிகளவு வாசிப்பு சாதனங்கள் இருக்கின்ற இடங்களிலுள்ள பிள்ளைகள் பரிட்சைகளில் அதிகளவு புள்ளிகளைப் பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாசிப்பு சாதனங்கள் பிள்ளைகள் படிக்கும் மேசைகளிலும் இறாக்கைகளிலும் மாத்திரம் வைக்காமல் படுக்கையறை, Family rooms , சாப்பாட்டறை,ஏன் தொலைக்காட்சி பெட்டிக்கு அருகாமையிலும் வைக்கலாம் வாகனங்களிலும் (Cars) புத்தகங்கள் வைக்கும் பழக்கம் மிகவும் விரும்பத்தக்கது. அவர்களுடைய வயதுக்குப் பொருத்தமான புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டும்.
கதை சுவாரஸ்யமானதாகவும் பிள்ளையின் மட்டத்திற்கு இறங்கி ஆசிரியர் கதையை தொடர்புபடுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்திருந்து வாசிக்கக் கூடிய ஒரு நேரத்தை ஏற்படுத்தி குறைந்தது ஒரு நாளைக்கு 15-30 நிமிடம் அமைதியாக இருந்து அனைவரும் வாசிக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்துதல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாளாந்தமோ அல்லது வாரந்தமோ பிள்ளையுடனிருந்து வாசிக்க ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.; பிள்ளைகள் மாறி மாறி பொற்றோருடன் சேர்ந்து வாசிப்பதில் மகிழச்சியடைவர். இது ஒரு சுவாரஷ்யமான வாசிப்பு (fun Reading) ஆக இருக்கும். வாசித்த கதையை வினா விடைகளோடு பரிமாறிக்கொள்ளல். பிள்ளையின் வாசிப்புக்குத் தேவையான இடவசதிகளை செய்து கொடுப்பது மிகவும் அவசியம்.
• புத்தகங்கள்புதினத்தாள்கள் போன்று இணையமும் ஒரு கற்றல் சாதனமாகும். இணையத்தைமுறையாகப் பாவிப்பதன் மூலம் இணைய வாசிப்பு பழக்கத்தையும் (online reading habits); ஊக்கப்படுத்தலாம். பிள்ளையுடைய வாசிப்பினை விருத்தி செய்வதற்காக பாடப் புத்தகங்களுடன் இகணணி நிகழ்சிகள் கேட்டல் சாதனங்கள் (audio and vedio) CDs ) என்பன அவற்றுள் முக்கியமானவை.
• பல வகையான வாசிப்புச் செயன்முறைகளை ஊக்குவித்தல். எமது பிள்ளைகளின் வாழ்வில் வாசிப்பு என்பது ஒரு மிக மிகத் தேவையான அத்தியவசியமான விடயம் என்று உணர்த்த வேண்டும் . பிரயாணம் செய்யும்போது வீதி சமிக்ஞைகள், திசைகள் இகாலநிலை அறிக்கைகள் இதொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் என நாளாந்தம் தேவைப்படும் பல தகவல்களையும் வாசித்து பெற்றுக்; கொள்ளும் பழக்கத்தை தன்மையை ஏற்படுத்தல். அத்துடன் எப்போதும் ஏதாவது ஒரு வாசிப்பு சாதனம் பிள்ளைகளிடம் (பொழுது போக்கிற்காக வாசிக்கக்கூடிய ) இருக்கின்றதா என்பதை பெற்றோர் நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
• நூலகத்தினை பாவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தல்.பிள்ளைகளை இரண்டுமூன்று வாரத்திற்கு ஒரு தடவை நூலகத்திற்கு அழைத்துச்சென்று புதிய புதிய வாசிப்பு சாதனங்களில் விருப்பத்தை ஏற்கடுத்தல் .பாடசாலை மற்றும் பொது நூலகங்களினால் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல்
• பிள்ளைகளுடைய முன்னேற்றம் தொடர்பான அறிவு பெற்றோருக்கு இருத்தல் வேண்டும் .
ஏந்தளவு வாசிப்பு திறன் குறித்த வகுப்பு பிள்ளையிடம் இருக்கவேண்டும் என்பதை பெற்றோர் விளங்கிருத்தல். இது பாடசாலையுடனும் குறித்த வகுப்பாசிரியருடனும் தொடர்பாக இருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாசிப்பதில் இடர்படும் பிள்ளையாயின் அதனைக்கண்டறிதல்
வாசிப்புப் பிரச்சினை பல வழிகளிலும் ஏற்படலாம் உதாரணமாக பார்வைக் குறைபாடு ,சொற்களை உச்சரிக்கமுடியாமை ,குரல் பிரச்சினை என்பன அவற்றுள் சிலவாகும். அவற்றை இணங்கண்டு திருத்துவதன் மூலம் இடர்பாட்டினைக் களையலாம்.
• பிள்ளையின் வாசிப்பில் பெற்றோர்ர் ஆர்வம் காட்டுதல்: பிள்ளையினுடைய வாசிப்பில் அக்கறை செலுத்தி அவர்களுடைய முயற்சியை பாராட்டி பரிசில்கள் வழங்குவது மிகவும் அவசியமாகும்.
ஒரு பிள்ளையின் வாசிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
ஒரு பிள்ளை வாசிப்பது குறைவாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியதும் அதைத் தீர்த்து வைக்க வேண்டியதும் ஆசிரியரினதும் பெற்றோரினதும் கடமையாகும்;.
நவீன தொழிநுட்ப வளர்ச்சியும் வாசிப்பில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றது இக்காலத்தில் அச்சிடப்பட்ட வளங்களுக்கு மேலாக இலத்திரனியல் வளங்கள் அதிகளவில் வெளியாகின்றன. அதாவது அச்சிடப்பட்ட புத்தகங்கள், சஞ்சிகைகள், பருவவெளியீடு, புதினத்தாள்கள், போன்று இப்போது தகவல்கள் கட்புல, செவிப்புல சாதனங்கள், இறுவட்டுகள் , இணையம், இலத்திரனியல் புத்தகங்கள்,; இலத்திரனியல் சஞ்சிகைகள், போன்ற வித்தியாசமான வடிவங்களிலும், ஊடகங்களிலும் அதிகளவில் வெளியிடப்படுகின்றன. இன்றைய தலைமுறையினர் கூடுதலாக அவற்றைப் பாவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர் எனவே முடியுமான பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு விரும்பிய இலத்திரனியல் வளங்களை பாவிப்பதற்கும் வாசிப்பதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வெறுமனே அச்சிடப்பட்ட வளங்களை மட்டும் தான் வாசிக்க வேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை அழுத்துவது இற்றைக்குப் பொருத்தமற்றது.
வாசிப்பதில் இடர்படும் பிள்ளையாயின் அதனைக்கண்டறிவது ஆசிரியரகளினதும் பெற்றோர்களினதும் கடமையாகும்.
வாசிப்புப் பிரச்சினை பல வழிகளிலும் ஏற்படலாம். உதாரணமாக பார்வைக் குறைபாடு ,சொற்களை உச்சரிக்கமுடியாமை இகுரல் பிரச்சினை என்பன அவற்றுள் சிலவாகும். அவற்றை இணங்கண்டு திருத்துவதன் மூலம் இடர்பாட்டினைக் களையலாம். பல காரணிகள் ஒரு பிள்ளையின் வாசிப்பில் செல்வாக்குச் செலுத்தலாம். முதலாவது உளவியல் காரணிகள் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. மோசமான வீட்டு நிலைமைகள். உதாரணமாக மிகக்குறைவான வசதி, மிகக்குறைவான ஊக்குவிப்பு, அதிக சத்தம், போதிய வெளிச்சமின்மை, தனிமை, பெற்றோரின் கல்வித் தகைமை மிகக் குறைவாக இருத்தல். மேலும் பாடசாலைச் சூழல் பொருத்தமற்ற கற்றல், கற்பித்தல் முறைகள்: நவீன வாசிப்பு முறைகள்; நுட்பங்கள் போன்ற வற்றில் ஆசிரியர் பயிற்றப்படாமை, ஒரு வகுப்பில் அதிக மாணவர்கள் இருத்தல் , போதியளவு வாசிப்பு உபகரணங்கள் இல்லாமை,(உ 10ம் புத்தகங்கள்); , நூல் நிலையங்கலள் இல்லாமை அல்லது அதிக தூரத்தில் இருத்தல் போன்ற காரணிகள் பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்திற்கு தடையாக அமையலாம். புpள்ளைகளை ஏனைய கவனக் கலைப்பான்களிலிருந்து விலக்கி ஒரு துறைப்படுத்துவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
முடிவுரை
வாசிப்பு என்பது ஒரு தனிநபரின் வெற்றிக்கு இன்றியமையாதது. முதலில் வாசிப்பின் முக்கியத்துவமும் அது ஒரு மகிழ்ச்சிகரமான செயல் என்றும் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட வேண்டும். அடுத்ததாக அவர்களுடைய வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் சில வசதிகளை ஏற்படுத்வதுடன் அவர்களுடன் சேர்ந்து வாசிப்பில் ஈடுபடுவதன் மூலம் வாசிக்கும் பழக்கத்தினையும் ஆர்வத்தினையும் தூண்டமுடியும். பிள்ளைகளின் வாசிப்பிற்குத் தடையாக இருக்கக்கூடிய காரணிகள் வீட்டுச்சூழலாக இருந்தாலும் சரி , பாடசாலைச் சூழலாக இருந்தலும் சரி அல்லது பிள்ளையின் தனிப்பட்ட உளவியல், உடல் சார் காரணிகளாக இருந்தாலும் அவை அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.
பிள்ளைகள் எப்போதும் பாடப்புத்தகங்களை மாத்திரம் வாசிப்பதற்கு விரும்பமாட்டார்கள். அதைவிடுத்து, சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், கவிதைகள்,; வீரதீரச் செயல்கள் , வரலாறுகள் , சமயம் சார்ந்த புத்தகங்கள் , பொது அறிவுப் புத்தங்கள் போன்ற வௌ;வேறான விடயங்களை வாசித்து மகிழ்வதற்கு சந்தர்பபங்கள் கொடுப்பது பெற்றோரின் கடமையாகு